யோகிபாபுவின் பன்னிகுட்டியை வெளியிட்ட மாதவன்

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பன்னிகுட்டி படத்தின் டிரைலரை மாதவன் வெளியிட்டிருக்கிறார்.
யோகிபாபு
யோகிபாபு
Published on

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் கருணாகரன், யோகிபாபு இருவரும் ‘பன்னிகுட்டி’ என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கிறார். காமெடி கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com