கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அறிவிப்பு

நீல்கிரீஸ் முருகன், தான் தயாரித்திருக்கும் ‘கூத்தன்’ படத்தை பார்ப்பவர்களுக்கு தங்கம் பரிசளிப்பதாக அறிவித்திருக்கிறார். #Koothan #KoothanMovie
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அறிவிப்பு
Published on

தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் ‘கூத்தன்’. இப்படத்தை ஏ.எல்.வெங்கி எழுதி இயக்குகிறார்.

அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற 11ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதிய முறையில் தொடங்கி பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் இப்போது படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்து ஆச்சர்யப்படுத்துகிறார். 

இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில் பட டிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன்நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன் பெட்டியில் போட வேண்டும். 

தமிழகம் முழுதும் அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1 பவுன் தங்கம் வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.

படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகனுக்கு பரிசு அறிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com