நடிகை கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டு காவ்யா மாதவன் மனு

நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நடிகை கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டு காவ்யா மாதவன் மனு
Published on

கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்ட திலீப்புக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அவர், ஜெயிலில் உள்ளார்.

இதுஒருபுறம் இருக்க இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் கூறிய மேடம் பெயரை வெளியிடுவேன் என்று கூறி, காவ்யா மாதவன் பெயரை கூறியிருந்தார். இதையடுத்து காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுறது.

இந்நிலையில், காவ்யா மாதவன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com