கார்த்திக் சுப்புராஜின் ‘நீளிரா’ டிரெய்லர் வெளியானது!

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள நீளிரா படத்தின் டிரெய்லர் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜின் ‘நீளிரா’ டிரெய்லர் வெளியானது!
Published on: 

நவீன் சந்திரா நடிப்பில், சோமீதரன் இயக்கத்தில் உருவாகி உள்ளப் படம் நீளிரா. இதனை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

படம் ஏப்.3 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது.

டிரெய்லரின்படி, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்ச் சூழலில், ஒரு திருமணம் நடைபெறுவதற்காகக் காத்திருக்கும் மணமக்கள் மற்றும் இரு வீட்டார் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com