சீனு ராமசாமியிடம் கற்றுக் கொண்டு விடைபெற்ற உதயநிதி

இயக்குனர் சீனு ராமசாமியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு விடைபெற்றிருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். #KanneKalaiMaane
சீனு ராமசாமியிடம் கற்றுக் கொண்டு விடைபெற்ற உதயநிதி
Published on

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. 

இப்படத்தை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்து வந்தார். ‘கண்ணே கலைமானே’ என்று தலைப்பு வைத்துள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். யுவன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. இதை இயக்குனர் சீனு ராமசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 

அதுபோல் உதயநிதியும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சீனு ராமசாமிக்கு நன்றி. உண்மையான படத்தை எப்படி உருவாக்குவது என்று உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்று பதிவு செய்திருக்கிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com