அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணே கலைமானே’ படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
Published on

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. 

இப்படத்தை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தில் உதயநிதி நடித்து வந்தார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். யுவன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் நிறைவடைந்தது. 

தமிழ் திரையுலகம் நடத்தி வந்த வேலை நிறுத்தத்தால் இதன் பின்னணி வேலைகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது வேலை நிறுத்தம் முடிவு வந்ததால், ‘கண்ணே கலைமானே’ படத்தின் டப்பிங் பணியை இன்று தொடங்கி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com