இந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்

ஷங்கர் - கமல்ஹாசன் மீண்டும் இணையவிருக்கும் `இந்தியன்-2' படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைவதாக கூறப்படுகிறது.
இந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்
Published on

22 வருடங்களுக்குப் பிறகு `இந்தியன்-2' படத்தின் மூலம் ஷங்கர் - கமல்ஹாசன் மீண்டும் இணைகின்றனர். 

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. ஊழலை எதிர்த்தும், அரசியல் நேர்மையையும், சீர்திருத்தத்தையும் சுட்டிக்காட்டிய `இந்தியன்' படத்தின் 2-வது பாகம் தயாரித்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அதுமட்டுமின்றி அரசியலில் ஈடுபட இருக்கும் கமலின் கருத்துக்களையும் இதில் அழுத்தமாக கூறமுடியும் என்பதால் சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. 

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்களை எழுதவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ரஜினியின் `2.0' படத்தின் கதை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் கலை பணிகளை ரவி வர்மன் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com