படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறேனா? - ஜெய் விளக்கம்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி படத்தில் நடித்திருக்கும் ஜெய், படப்பிடிப்புக்கு லேட்டாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஜெய்
ஜெய்
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி, என அனைத்து மொழிகளிலும் வெற்றி படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திர சேகர். தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், ரகுமான் என பல முன்னணி நடிகர்களை இயக்கியதோடு விஜயகாந்த், விஜய், விஜய் ஆண்டனி, சிம்ரன், போன்ற பலரையும் திரையுலகில் பிரபலப்படுத்தியவர். இவர் இயக்கும் 70 வது படம் “கேப்மாரி”.

இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இது ஜெய் நடிக்கும் 25வது படமாகும். இவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி நடிக்க சத்யன், தேவதர்ஷினி, பவர் ஸ்டார், லிவிங்ஸ்டன், சித்தார்த் விபின் (இசை அமைப்பாளர்) நடிக்கிறார்கள்.

வரும் டிசம்பர் 6-ந்தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து ஜெய் பேசியதாவது:- இந்த படத்தின் கதை கேட்டபோது என் வாழ்க்கையையே பார்ப்பது போல் இருந்தது. படத்திலும் பல காட்சிகளில் என்னை இணைத்து கொண்டேன். நான் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதாக செய்தி தொடர்ந்து வருகிறது. கடந்த 7,8 ஆண்டுகளாக சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு சென்று வருகிறேன்.

என்றாவது ஒரு நாள் நடந்ததை பற்றி தான் இன்னும் எழுதுகிறார்கள். படத்தில் நான் பெண்களிடம் அடங்குவது போன்ற வேடங்களில் அதிகம் நடிப்பதாக சொல்கிறார்கள். பெண்களிடம் நாம் அடங்கிப் போவது தவறு இல்லை. பெண்களைத்தான் நாம் அடக்கக்கூடாது. இரண்டு கதாநாயகிகளில் யார் எனக்கு வசதியாக இருந்தார் என்றால் இருவருமே வசதியாகத்தான் இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் எனக்கு மிகவும் வசதியாக இருந்தார். இவ்வாறு ஜெய் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com