அகோரியாக மாறிய ஜாக்கி ஷெராப்

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அகோரியாக மாறியிருக்கிறார். #JackieShroff #PandiMuni
அகோரியாக மாறிய ஜாக்கி ஷெராப்
Published on

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு 'பாண்டி முனி' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கஸ்தூரி ராஜா இயக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறும்போது, 

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் ‘பாண்டி முனி’.

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படமாக உருவாக்கி இருக்கிறேன்.

சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com