ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா

நடிகர் ஆரவ்வை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவரை என்னால் மறக்க முடியாது என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.
ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா
Published on

இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள்.

அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. ஆரவ் நாகர்கோவிலை சேர்ந்தவர். தற்போது திருச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட டெலிவிஷன் விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் சைத்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரவ் நெருக்கமாக பழகியதால் அவர் தன்னை காதலிப்பதாக ஓவியா நம்பினார். காதலை அவரிடம் நேரில் தெரிவித்தபோது நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொல்லி ஆரவ் பின்வாங்கினார். பின்னர் காதல் தோல்வியால் மன அழுத்தத்துக்கு ஓவியா உள்ளானார்.

ஓவியாவை மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. காதல் தோல்வியால் அழுதுகொண்டு இருந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். காதல் வலையில் சிக்கிய ஓவியாவின் மன நிலையை அறிய அவரிடம் நடிகர் கமல்ஹாசன் கேள்விகள் கேட்டார். அதற்கு ஓவியா அளித்த பதில் வருமாறு:-

“நான் காதல் வலையில் சிக்கியது உண்மைதான். அதில் சில தெளிவுகள் கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் என்மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆரவ் எனது வாழ்க்கையில் முதுகெலும்பு போன்றவராக இருக்கிறார். நான் உயிருக்கு உயிராக அவரை காதலிக்கிறேன். ஆரவ்வுக்காக நான் காத்து இருப்பேன். அவர் விரைவில் என்னிடம் வருவார்.”

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com