அலைபாயுதே-2 கனவோடு இருக்கும் ஸ்வாதிஷ்டா

மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே-2 படத்தில் தன்னை நாயகியாக நடிக்க வைப்பார் என்று தான் வேடிக்கையுடன் கனவு காண்பதாக ஸ்வாதிஷ்டா தெரிவித்துள்ளார். #Swathishta
அலைபாயுதே-2 கனவோடு இருக்கும் ஸ்வாதிஷ்டா
Published on

யூடியூப் பக்கங்களில் பிரபலமான நடிகை ஸ்வாதிஷ்டா சவரக்கத்தில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் தற்போது பிசியாகி இருக்கும் ஸ்வாதிஷ்டா பேசும் போது,

சவரக்கத்தி படத்தை தொடர்ந்து, ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் கீ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கீ படத்தில் ஜீவாவுடன் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். என்னுடைய பெரும்பாலான காட்சிகளில் ஜீவாவுடன் இணைந்து நடித்தேன். அடுத்ததாக `மதம்' என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறேன்.

அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் நான் வியந்து பார்க்கிறேன். நான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை ஷாலினி அஜித்குமார். அவரின் வேலையை பற்றி குறிப்பிட ஒரு இணையான சொல் கிளாசிக் தான். இளம் வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரம், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு. மேலும், மணிரத்னம் சார் அலைபாயுதே-2 படத்தை எடுப்பார், அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பார்" என்ற மெய்மறந்த வேடிக்கையான கனவும் எனக்கு வரும்" என்றார். #Swathishta

X

Maalai Malar
www.maalaimalar.com