காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்

வாடகை காரில் பயணித்த போது நடிகை பார்வதி நாயருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து பார்வதி விளக்கம் அளித்துள்ளார். #ParvathyNair
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
Published on

இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி நாயரும் சென்னையில் வாடகை காரில் பயணித்தபோது, தொல்லைகள் அனுபவித்ததாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பார்வதி நாயருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது.

நடிகர்-நடிகைகள் பலரும் பார்வதி நாயரை தொடர்புகொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். பார்வதி நாயர் என்னை அறிந்தால், உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். பாலியல் தொல்லை குறித்து வெளியான தகவலுக்கு பார்வதி நாயர் டுவிட்டரில் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-

“எனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டது என்பது தவறான செய்தி. டிரைவர் மரியாதை இல்லாமல் அநாகரிகமாக நடந்து கொண்டார். ஜி.பி.எஸ். தவறாக காட்டியதால் தவறான வழியில் சென்றார். அவர் என்னிடம் தவறாக நடக்கவில்லை. எனவே வதந்தியை பரப்ப வேண்டாம்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ParvathyNair

X

Maalai Malar
www.maalaimalar.com