மனைவியின் பிறந்தநாளை ஐங்கரனுடன் கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தனது மனைவியின் பிறந்த நாளை ‘ஐங்கரன்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
மனைவியின் பிறந்தநாளை ஐங்கரனுடன் கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்
Published on

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘நாச்சியார்’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் பெரும்பாலான படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது ‘ஐங்கரன்’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் தனது மனைவியும், பாடகியுமான சைந்தவியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது, ‘ஐங்கரன்’ படத்தின் இயக்குனர் ரவி அரசு, ‘அடங்காதே’ படத்தின் இயக்குனர் சண்முகம் மற்றும் ஐங்கரன் படக்குழுவினர் ஆகியோர் சைந்தவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி, ‘அந்நியன்’ படத்தில் இடம் பெற்ற ‘ரண்டக்க... ரண்டக்க...’ என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து ‘தொட்டி ஜெயா’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘பையா’, ‘மதராசப்பட்டினம்’, ‘தலைவா’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com