‘த்ரிஷ்யம் 3’ டீசர் வெளியீடு!

மோகன்லால் நடித்துள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் டீசர் வெளியானது.
‘த்ரிஷ்யம் 3’ டீசர் வெளியீடு!
Published on

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றப் படம் த்ரிஷ்யம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதுவும் வெற்றிப் பெற்றநிலையில் தற்போது மூன்றாம் பாகம், த்ரிஷ்யம் -3 உருவாகி உள்ளது.

முந்தைய பாகங்களைத் தொடர்ந்து, ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களை இப்படம் விவரிக்கிறது.

இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.

இப்படம் மே.21ஆம் தேதி வெளியாகிறது. இதன் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோவை தவிர வேறு நிறுவனங்களுக்கு விற்க டெல்லி உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com