

இந்தி, தெலுங்கு பட உலகில் பிரபல டைரக்டராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. இவரது ‘ரத்த சரித்திரா’, ‘கில்லிங் வீரப்பன்’ ஆகிய படங்கள் தமிழிலும் வெளியிடப்பட்டன. டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் அமெரிக்காவில் செக்ஸ் படங்களில் நடித்து பிரபலமான மியா மால்கோவாவை அழைத்து வந்து ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத்’ என்ற ஆபாச படத்தில் நடிக்க வைத்து டைரக்டு செய்தார்.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி படத்தை முடித்தார். அந்த படத்தில் மியா மால்கோவா ஆடையில்லாமல் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தியேட்டர் அதிபர்கள் திரையரங்குகளில் படத்தை வெளியிட மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த படத்தை கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டு விட்டார்.
படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் அறிக்கை வெளியிட்டனர். ஐதராபாத் போலீசிலும் ராம்கோபால் வர்மா, மியா மால்கோவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தகவல் பரவி உள்ளது.