கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குனர் சேரன்

பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சேரன், ஒரு படத்தின் கதையை கேட்டதும் பாடலாசிரியராக மாறியிருக்கிறார்.
கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குனர் சேரன்
Published on

"இந்தக் கதையை எழுதியவர் இயக்குனர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குனராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குனர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார். 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...' எனத் தொடங்கும் அந்தப் பாடலை இஷான் தேவ் இசையமைத்துப் பாடியுள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான். மிகச் சிறப்பாக அமைந்துள்ளது...", என்கிறார் சுரேஷ் காமாட்சி.

மிக மிக அவசரம் படத்தில் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ஹரீஷ் நடித்துள்ளார். வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஈ ராமதாஸ், வீகே சுந்தர், சக்தி சரவணன், அரவிந்த், குணா, வெற்றிக்குமரன், சாமுண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com