தொடரும் சிக்கல்: திலீப்பின் ஜாமீன் மனு 4-வது முறையாக தள்ளுபடி

நடிகை கடத்தல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நடிகர் திலீப் தரப்பு தொடர்ந்த ஜாமீன் மனு 4-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடரும் சிக்கல்: திலீப்பின் ஜாமீன் மனு 4-வது முறையாக தள்ளுபடி
Published on

கேரளாவில் ஓடும் காரில் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்ட திலீப், ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டிலும், கேரள ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். திலீப்பை ஜாமீனில் விட அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இந்நிலையில், 2 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில் அவரது தந்தை நினைவு நாளின் போது பரோலில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து 4-வது முறையாக திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com