

ஆனால், திலீப் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலீப்பை வருகிற ஜுலை 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் நடிகர் திலீப் சார்பில் இன்று கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடந்து முடிந்துவிட்டதால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனு குறித்த விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.