சிம்பு ஜோடியான டயானா எரப்பா

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு கூறியிருக்கிறார். #CCV #STR
சிம்பு ஜோடியான டயானா எரப்பா
Published on

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் சமீபத்தில் முடிந்தது. 

இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு வெளியிட்ட வீடியோவில் கூறியிருக்கிறார். சிம்பு - டயானா எரப்பா சம்பந்தப்பட்ட காட்சிகள் கடைசியாக செர்பியாவில் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் படத்தின் டப்பிங் பணிகள் துவங்க இருக்கிறது. 

சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #STR #Simbu #DayanaErappa

X

Maalai Malar
www.maalaimalar.com