வள்ளுவன்- திரை விமர்சனம்
வள்ளுவன்- திரை விமர்சனம்வள்ளுவன்- திரை விமர்சனம்

வள்ளுவன்- விமர்சனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டத்தின் மீதான நம்பிக்கை மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
Published on
வள்ளுவன்- விமர்சனம்(2.5 / 5)

சென்னையில் உணவு விநியோக ஊழியராக பணிபுரியும் நாயகன் சேத்தன் சீனு, முதியோர் இல்லத்தில் சேவை செய்து வரும் நாயகி ஆஷ்னா சாவேரியுடன் நட்பாக பழகுகிறார். இதற்கிடையே, அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலில் திருக்குறளில் இடம்பெறும் சில வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது காவல்துறையை அதிர்ச்சியடைய வைக்கிறது.

தொடர்ந்து அதே பாணியில் மேலும் சில கொலைகள் நடக்க, இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பிரேம்குமார், இந்த கொலைகளின் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.

இறுதியில் உண்மையான கொலையாளி யார்? இந்த கொலைகளின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்

நாயகனாக நடித்திருக்கும் சேத்தன் சீனு, தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி வழக்கமான கதாநாயகியாக வந்தாலும், இறுதியில் அவரது கதாபாத்திரம் எதிர்பாராத திருப்பத்தை கொடுக்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டத்தின் மீதான நம்பிக்கை மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சங்கர் சாரதி. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பணம், அதிகாரத்தின் மூலம் குற்றவாளிகள் தப்பிப்பது போன்ற விஷயங்களை பேச முயற்சித்திருக்கிறார். சிறிய முதலீட்டில் சமூக கருத்துடன் கூடிய ஒரு திரில்லர் படத்தை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், திரைக்கதையில் சுவாரசியம் சேர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா காட்சிகளை இயல்பாக பதிவு செய்திருக்கிறார். அஸ்வத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு தேவையான பலத்தை கொடுக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com