செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த 4 பிரபலங்கள் - ஸ்வீட் சர்ப்ரைஸ்

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பில் அரவிந்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் உள்ளிட்ட 4 பேரும் கலந்து கொண்டனர். #CCV
செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த 4 பிரபலங்கள் - ஸ்வீட் சர்ப்ரைஸ்
Published on

`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியாக படமாக்கப்பட்டு வந்த நிலையில், நடிகர்கள் 4 பேரும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி போலீசாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கின்றனர். ஜோதிகா ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. #CCV 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com