செக்கச் சிவந்த வானம் - முக்கிய தகவலை வெளியிட்ட அரவிந்த்சாமி

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்றை நடிகர் அரவிந்சாமி வெளியிட்டுள்ளார். #CCV #Arvindswami
செக்கச் சிவந்த வானம் - முக்கிய தகவலை வெளியிட்ட அரவிந்த்சாமி
Published on

மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் நடிகர்கள் 4 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், அரவிந்த்சாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

`செக்கச் சிவந்த வானம் படத்தில் எனது காட்சிகளை முடித்துவிட்டேன், மணி சார் மற்றும் அவரது குழுவுடன் பணியாற்றுவது எப்போதுமே மிகச்சிறந்த அனுபவம் தான். இதில் `செக்கச் சிவந்த வானம்' படம் கொஞ்சம் ஸ்பெஷலானது, என்பதை உணர முடிகிறது. ஒரு சிறய இடைவேளைக்குப் பிறகு, வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புரமோஷனில் பங்கேற்க உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. 

மேலும் இந்த படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. #CCV #Arvindswami

X

Maalai Malar
www.maalaimalar.com