நடிகை கடத்தல் விவகாரம்: திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்

நடிகை கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
நடிகை கடத்தல் விவகாரம்: திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்
Published on

கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி ஜெயிலுக்குச் சென்ற திலீப், ஜாமீனில் விடுவிக்க கோரி அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 2 முறையும் கேரள ஐகோர்ட்டில் 2 முறையும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து திலீப் 5-வது முறையாக கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக அரசு வக்கீலும், திலீப்புக்கு ஆதரவாக ஆஜரான வக்கீலும் வாதம் செய்தனர். இந்த விவாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் வழங்குவது தொடர்பான தீர்ப்பை தள்ளி வைத்தார்.

இன்று அல்லது நாளை இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே திலீப் கைது செய்யப்பட்டு வருகிற 8-ந் தேதியுடன் 90 நாட்கள் முடிவடைகிறது. அதுவரை இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், திலீப்புக்கு ஜாமீன் கிடைத்து விடும்.

இதற்கு 5 நாட்களே இருப்பதால் அதற்குள் திலீப் மீதான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணங்களுடன் கூடுதல் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை போலீசார் வேகமாக திரட்டி வருகிறார்கள். இரண்டொரு நாட்களில் இந்த குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com