மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு

சாத்தான்குளம் வழக்கில் மாஜிஸ்திரேட்டிடம் துணிச்சலுடன் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை திரைப்பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ், நிவேதா பெத்துராஜ், ராஷிகன்னா, கமல்ஹாசன், வெற்றிமாறன்
ஜி.வி.பிரகாஷ், நிவேதா பெத்துராஜ், ராஷிகன்னா, கமல்ஹாசன், வெற்றிமாறன்
Published on

சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விடிய விடிய அடுத்து துன்புறுத்தியதாக மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை பாராட்டி இணைய தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர். அதில் பலரும் ரேவதியை வாழ்த்தி பதிவுகள் வெளியிடுகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது வலைத்தள பக்கத்தில், “சாத்தான்குளம் இரட்டை கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிகொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் வலைத்தளத்தில், “ரேவதிக்கு வாழ்த்துக்கள், இந்த தேசம் உங்கள் பின்னால் நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com