நடிகை மானபங்க வழக்கு: நடிகர் திலீப் உதவியாளரிடம் 6 மணி நேரம் விசாரணை

கொச்சியில் உள்ள போலீஸ் விசாரணை குழு முன்பு ஆஜரான அப்புண்ணியிடம் 6 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடைபெற்றது.
நடிகை மானபங்க வழக்கு: நடிகர் திலீப் உதவியாளரிடம் 6 மணி நேரம் விசாரணை
Published on

பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப் கைது செய்யப்பட்டார். அவருடைய உதவியாளரும், மேலாளருமான அப்புண்ணிக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. இதனால் அவர் முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதே சமயத்தில், அப்புண்ணியிடம் போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. அதையடுத்து, போலீசார் அழைப்பின்பேரில், கொச்சியில் உள்ள போலீஸ் விசாரணை குழு முன்பு அப்புண்ணி நேற்று காலை 11 மணிக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com