மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் ’பாலன்’ - வெளியீடு தேதி அறிவிப்பு!

'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள 'பாலன்' திரைப்படம் ஜூன் 19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின்   ’பாலன்’ - வெளியீடு தேதி அறிவிப்பு!
Published on

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் புதிதாக உருவாகி உள்ளப் படம் பாலன்: தி பாய்'. 'ஆவேஷம்' மற்றும் 'ரோமஞ்சம்' படங்களின் இயக்குநரான ஜித்து மாதவன் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார்.

இப்படத்தில் டொவினோ தாமஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஒரு பதின்பருவ சிறுவன், காணாமல் போன தனது தாயைத் தேடிச் செல்லும் பயணத்தையும், அவர்களுக்கிடையேயான பிணைப்பையும் மையமாகக் கொண்டது இக்கதை எனக் கூறப்படுகிறது.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், மே 14-ஆம் தேதி இந்தப் படம் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com