காதல் கதைகள் எதுவும் வருவதில்லை - அசோக் செல்வன்

ஓ மை கடவுளே படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், காதல் கதைகள் எதுவும் தற்போது வருவதில்லை என்று கூறியிருகிறார்.
அசோக் செல்வன்
அசோக் செல்வன்
Published on

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறும்போது, ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். பல வருடமாக இயக்குனர் அஷ்வத்தை எனக்கு தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு செய்து இப்படத்தை உருவாக்கினோம். 

படத்தில் நாயகி ரோல் முக்கியமானது. ரித்திகா சிங் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இரண்டு பேரும் நினைத்தோம். அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கதை கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சது. படமே அவங்கள சுத்திதான் நடக்கும். 

ரித்திகா மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும் போது எனக்கு உதவியாக இருந்தது. வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங்களுக்கு இது தமிழ்ல முதல் படம். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடித்திருக்கிறார்.

எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர் கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, எல்லாருக்கும் பிடிக்கும்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com