அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். #AmalaPaul
அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது
Published on

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் இன்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடனப் பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மீது புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பெயரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அழகேசன் ஆபாசமாக பேசிய ஆடியோவை போலீஸ் நிலையத்தில் அமலாபால் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால், ‘மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடன பயிற்சி செய்து வந்தேன். அப்போது, அழகேசன் என்பவர் என்னிடம் ஆபாசமாக பேசினார். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவர்களுக்கு நன்றி’ என்றார். இதுப்போன்ற ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com