தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு சந்தீப் தான்: இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுசீந்திரன், தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு சந்தீப் சிறந்த நடிகராக வருவார் என்றார்.
தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு சந்தீப் தான்: இயக்குநர் சுசீந்திரன்
Published on

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசிய போது:- நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும், தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன்.

ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது.
 
சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி சென்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாகவே அனைவரையும் உறையச் செய்ய முடியும். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com