மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா

சென்னையில் நடந்த கீர்த்தனா - அக்‌ஷய் திருமண நிச்சயதார்த்தத்தில் நடிகை சீதா கலந்து கொண்டார்.
மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
Published on

தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படம் டைரக்டு செய்ய திட்டமிட்டு உள்ளார். இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணத்தில் நடிகை சீதா கலந்து கொள்வார் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கீர்த்தனா-அக்‌ஷய் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் பங்கேற்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com