ரூ.7 கோடி பழைய நோட்டுகள் என்னுடையது அல்ல: நடிகை ஜீவிதா மறுப்பு

ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.7 கோடி பழைய நோட்டுகள் என்னுடையது அல்ல என்று நடிகை ஜீவிதா மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.7 கோடி பழைய நோட்டுகள் என்னுடையது அல்ல: நடிகை ஜீவிதா மறுப்பு
Published on

இதையடுத்து அந்த நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ரூ.7 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சினிமா தயாரிப்பு மேலாளர்கள் ஸ்ரீநிவாஸ், ரவி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனை நடந்த நிறுவனத்தின் முதல் மாடியில் நடிகை ஜீவிதாவின் சினிமா தயாரிப்பு அலுவலகம் உள்ளது. மேலும் கைதான ஸ்ரீநிவாஸ், நடிகை ஜீவிதாவின் மேலாளர் ஆவார்.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 கோடி ஜீவிதாவுக்கு சொந்தமானதா என்றும், ஸ்ரீநிவாஸ் அவரது சகோதரர் என்றும் தகவல் பரவியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்து நடிகை ஜீவிதா கூறியதாவது:-

கைதாகி உள்ள ஸ்ரீநிவாஸ் எனது கணவர் நடித்து வரும் கருடலேகா படத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல் பலருக்கும் மேலாளராக பணியாற்றி வருகிறார். எனது சகோதரர் பெயர் முரளி ஸ்ரீநிவாஸ். அவர் சிறுநீரகம் பாதிப்பு அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 கோடி என்னுடையது அல்ல. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

X

Maalai Malar
www.maalaimalar.com