புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ வெளியீட்டில் மாற்றம்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீடு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா ஸ்கார்பியோ
Published on

மஹிந்திரா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்கள் 2021-22 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யுவி500 எஸ்யுவி மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இரு மாடல்களையும் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீட்டை மஹிந்திரா நிறுவனம் ஒத்திவைத்து இருக்கிறது. இதனை மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா நிதிநிலை அறிக்கை வெளியீட்டின் போது தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com