ஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்து இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Published on

ஹூரோ எலெக்ட்ரிக் நிறுவனம் Be a Bike Buddy எனும் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் ஏற்கனவே ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துவோரின் அறிவுறுத்தலால் புதிய ஹீரோ எலெக்ட்ரிக் வாகனத்தை ஆன்லைனில் வாங்கும் போது வாடிக்கையாளருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் ஹீரோ எலெர்ட்ரிக் வாகனத்தை வாங்க கோரும் வாடிக்கையாளருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமேசான் வவுச்சர் வழங்கப்படுகிறது. ஒரு ஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர் அதிபட்சமாக இரண்டு புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்ய முடியும். 

இத்துடன் ரிஃபெர் செய்யப்படுபவர்களில் ஒவ்வொரு 50 ஆவது வாடிக்கையாளருக்கும் கிளைடு எலெர்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.  இதேபோன்று வாடிக்கையாளர்கள் ஆப்டிமா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வென்றிட முடியும். 

ஹீரோ எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ஜூன் 25 ஆம் தேதி துவங்கி தூலை 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com