வாகன விற்பனையில் உச்சத்தை தொட்ட டாடா..!

டாடா நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும், இந்த வருடம் ஜூன் மாதம் 69 சதவீதம் அதிகமாக கார்களை விற்பனை செய்துள்ளது.
டாடா EV கார்
டாடா EV கார்
Published on

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் திகழ்ந்து வருகிறது. தற்போது EV கார் விற்பனையிலும் கவனம் செலுத்தி வருகிறது. நேற்று சியாரா மாடல் காரை அறிமுகம் செய்தது. இதுவரை ஏழு மின்சார மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு கார் விற்பனையை காட்டிலும் இந்த வருடம் ஜூன் மாதத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 69 சதவீதம் கார் விற்பனை அதிகரித்துள்ளது.

இதில் பயணிகள் வாகனம் விற்பனை மட்டும் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. 2025-ல் 37,083 வாகனங்களை விற்பனை செய்த டாடா, 2026 ஜூன் மாதத்தில் 62,076 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

EV வாகனங்கள்

கடந்த 2025-ல் 5228 EV வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த வருடம் ஜூன் மாதத்தில் 14,800 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்கான கார் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 154 ஆக இருந்து நிலையில், தற்போது 1007 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வாகனங்கள் விற்பனை 1,24,809 ஆக இருந்த நிலையில், இந்த வருடம் முதல் காலாண்டில் 1,82,574 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 46 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக (பயணிகள் வாகனங்கள் உள்பட) 63,083 வாகனங்கள் அதிக அளவில் விற்பனை செய்துள்ளது. இது 69 சதவீதமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com