மஹிந்திரா காருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு

மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடலுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. மஹிந்திரா தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் நான்கு மாதங்களாக உள்ளது.
மஹிந்திரா காருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு
Published on

மஹிந்திரா தார் ஆஃப் ரோடர் மாடலின் ரியர் வீல் டிரைவ் (RWD) வெர்ஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தார் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மஹிந்திரா தார் RWD வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார் 4WD வேரியண்ட்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. இவற்றில் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 60 ஆயிரம் வரையிலான அக்ச்ஸரீக்கள் வழங்கப்படுகிறது.

இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் போனஸ், ரூ. 15 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இவற்றுடன் இன்சூரன்ஸ் பலன்கள், மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும், இந்த பலன்கள் MY2022 LX பெட்ரோல் AT 4WD வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் மஹிந்திரா தார் 4WD MY2022 LX பெட்ரோல் AT வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இதுதவிர மஹிந்திரா தார் RWD மற்றும் 4WD வெர்ஷன்களின் காத்திருப்பு காலம் முறையே 18 மாதங்கள் மற்றும் நான்கு மாதங்களாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் ஒவ்வொரு பகுதி, மாடல், விற்பனை மையம் என பல்வேறு விஷயங்களை பொருத்து வேறுப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com