

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடலின் விலையை மாற்றியமைத்துள்ளது. இந்த விலை மாற்றம் வென்யூ காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். விலை உயர்வு ரூ. 5,200-இல் தொடங்கி அதிகபட்சம் ரூ. 20,000 வரை மாறியுள்ளது. இது காரின் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும்.
விலை உயர்வை தொடர்ந்து வென்யூ HX5 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் விலை ரூ. 20,000 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த வேரியண்ட் விலை ரூ. 9.55 லட்சம் என மாறியுள்ளது.
இதைத் தொடர்ந்து HX6 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் HX6 1.0 டர்போ பெட்ரோல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களின் விலை ரூ. 9,000 அதிகரித்துள்ளது.
இதேபோல் HX5 1.0லிட்டர் டர்போ பெட்ரோல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மாடலின் விலை ரூ. 8,900 வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல் வேரியண்ட்களை போன்று HX2 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன், HX5 டீசல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், HX7 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன், HX7 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் டூயல் டோன் வேரியண்ட்களின் விலை ரூ. 8,000 அதிகரித்துள்ளது.
இத்துடன் HX8 1.0 டர்போ பெட்ரோல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் HX8 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களின் விலை ரூ. 5,200 உயர்ந்துள்ளது. இவைதவிர வென்யூ காரின் மற்ற வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது 2026 ஹூண்டாய் வென்யூ என்ட்ரி லெவல் மற்றும் டாப் எண்ட் வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இவை முறையே ரூ. 8 லட்சம், எக்ஸ்-ஷோரூம் மற்றும் ரூ. 15.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்றே உள்ளது. இந்த மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவற்றுடன், 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது.