ஏத்தர் உருவாக்கியதிலேயே அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டீசர் வெளியீடு

மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். உலகத்தரம் வாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும்.
ஏத்தர் உருவாக்கியதிலேயே அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டீசர் வெளியீடு
Published on

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 450 அபெக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. டீசரின் படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிவேக செயல்திறன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

புதிய ஏத்தர் ஸ்கூட்டரின் பெயர் "அபெக்ஸ்" என்று சூட்டப்பட்டு இருப்பதை ஒட்டி, இந்த மாடல் குறைந்த நேரத்தில் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஏத்தர் 450X மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும்.

அந்த வகையில் புதிய ஏத்தர் 450 அபெக்ஸ் மாடல் உலகத்தரம் மிக்க செயல்திறனை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com