இந்திய சந்தையில் டிசம்பர் மாத வாகனங்கள் விற்பனை நிலவரம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிசம்பர் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வெளியாகி இருக்கிறது.
வாகனங்கள்
வாகனங்கள்
Published on

இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் கார், பைக் போன்ற மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி மாருதி சுசுகி நிறுவனம், மொத்தம் 1.33 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தை காட்டிலும் இது 3.9 சதவீதம் உயர்வாகும். 2018 டிசம்பரில் விற்பனை 1.28 லட்சம் கார்களாக இருந்தது.

மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 39,230 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2018 டிசம்பரில் அது 39,755-ஆக இருந்தது. அந்த வகையில் விற்பனை 1 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை 1 சதவீதம் அதிகரித்து (36,690-ல் இருந்து) 37,081-ஆக உயர்ந்து இருக்கிறது.

வர்த்தக வாகனங்கள் விற்பனை 16,018-ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் அது 16,906-ஆக இருந்தது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் உயர்ந்து (15,091-ல் இருந்து) 15,691-ஆக அதிகரித்து இருக்கிறது. ஏற்றுமதி 30 சதவீதம் சரிவடைந்து 2,149 வாகனங்களாக இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், மொத்தம் 50,135 கார்களை விற்பனை செய்துள்ளது. 2018 டிசம்பரில் அது 55,638 கார்களாக இருந்தது. அந்த வகையில் விற்பனை 9.9 சதவீதம் சரிந்துள்ளது. உள்நாட்டு விற்பனை 37,953-ஆக குறைந்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 42,093-ஆக இருந்தது. ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்து 12,182 கார்களாக உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை 6.91 லட்சமாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் குறைவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com