கடகம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை

நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும்.
கடகம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை
Published on

கடகம்

மன வலிமை அதிகரிக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சனியுடன் சேர்க்கை பெறுகிறார். அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். சிலர் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கூட்டுச் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பணம் எதிர்பாராத இடங்களில் இருந்து கிடைக்கும்.

நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும். மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தள்ளிப் போன திருமணம் காரியங்கள் கூடி வரும். ஆரோக்கியம் சீராகும். உலவுகின்ற கிரக நிலை வியாபாரத்திற்கு ஓரளவு உதவிகரமாக இருக்கும். புதிய தொழிலுக்காக விண்ணப்பித்த லைசென்ஸ் கிடைக்கும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். கேள்விக்குறியாக இருந்த பல குழப்பங்கள் விலகும். தத்தாத்ரேயரை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com