மேஷம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை

வண்டி, வாகன டீலர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும்.
மேஷம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை
Published on

மேஷம்

திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வாரம். வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிகிறது. வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெறுகிறது. தடைபட்ட பத்திரப் பதிவுகள் நடக்கும். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. தொட்டது துலங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரம் அமோகமாக நடக்கும்.

சிறு சில்லரை வணிகம், கூட்டுத் தொழில் செய்பவர்கள், தங்கம் மற்றும் மஞ்சள் வியாபாரிகளுக்கு, வண்டி, வாகன டீலர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். இன்னும் இரண்டு மாத காலங்களுக்கு மட்டுமே லாப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருக்கும் என்பதால் வராகடன்களை வசூலிக்க முயற்சி செய்வது நல்லது 5.4.2026 அன்று மாலை 5.28 முதல் 8.4.2026 அன்று அதிகாலை 5.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். தினமும் சிவபுராணம் படிக்கவும்

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com