கும்பம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை

விண்ணப்பித்த வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும்.
கும்பம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை
Published on

கும்பம்

முயற்சிகள் பலிதமாகும் வாரம். ராசியில் உள்ள புதனுக்கு குரு பார்வை இருப்பதால் புதன் பலம் பெறுகிறார். தொழில் தந்திரம் மிகும். மதி நுட்பத்தால் தொழிலில் சாதனை படைப்பீர்கள்.பல தொழில் துறை பற்றிய அறிவு உண்டாகும். கற்ற கல்விக்கு தகுந்த வேலை உண்டு. குழந்தை பேறு, திருமணம், வீடு, வாகன யோகம் என கும்ப ராசிக்கு அடுத்த சில நாட்கள் அடை மழைதான். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் குழப்பங்கள் அகலும். முயற்சிக்கான பலன்களை உடனடியாக காண முடியும்.

ஆரோக்கிய குறைபாடு அகலும். விண்ணப்பித்த வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். தந்தை, மகன் கருத்து வேறுபாடு அகலும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் உதவியும் உண்டு உபத்திரமும் உண்டு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட ஆனந்தமான வாழ்க்கை அமையும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com