மகரம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை

வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மகரம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை
Published on

மகரம்

மனசஞ்சலம் அகலும் வாரம். ராசி அதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து விலகி தனிக்குடித்தனம் செல்வார்கள். சிலர் கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் ஏமாற்றம் அல்லது இழப்பை சந்திக்கலாம். திருமணத் தடை அகலும். ஏப்ரல் மாதத்திற்குள் திருமணத்தை உறுதி செய்வது நல்லது. நல்ல மக்கட்பேறும், விசுவாசமான வேலையாட்களும் கிடைப்பார்கள். உத்தியோகத்திற்காக அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்வீர்கள்.

வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். மன சஞ்சலத்தால் ஏற்பட்ட ஆரோக்கியகேடு சீராகும். புதிய வீடு, நில புலன்கள், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும். வளர்வதும் தேய்வதுமாக இருந்த வாழ்க்கை மாறி நிலையாகும். சிலருக்கு தாய்மாமனால் தாய் வழிச் சொத்து விரயமாகும். பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள். சனிக்கிழமை உணவு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com