தனுசு- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை

கை விட்டுப் போன பொருட்கள் யாவும் மீண்டும் கிடைக்கும்.
தனுசு- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை
Published on

தனுசு

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும் வாரம். ராசி அதிபதி குரு ராசிக்கு ஏழாம் இடத்தில் நின்று தன் வீட்டைத் தானே பார்ப்பதால் நண்பர்கள், வாழ்க்கைத் துணை மூலம் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் பிடிப்பும், உற்சாகமும் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமூக நிலை ஏற்படும். தொழில் கடன் மற்றும் வீட்டு வசதிக்கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணத் தடை அகலும்.

பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடக்கும் யோகம் உள்ளது. கை விட்டுப் போன பொருட்கள் யாவும் மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகமாகும். தன வரவு மும்மடங்காகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடனுக்கு பயந்து ஒளிந்த நிலை நீங்கும். வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். போட்ட முதலீட்டை எடுக்க முடியாத நிலை குறையத் துவங்கும். மனச் சுமை குறையும். புதிய சொத்துக்கள் சேரும். நாத்தனார், மாமியாரால் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். தினமும் திருக்கோளாற்று பதிகம் படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com