விருச்சிகம்- வார ராசிபலன் 3.5.2026 முதல் 9.5.2026 வரை

ஆரோக்கிய குறைபாடு விலகி எல்லாவற்றிலும் சாதகமான சூழ்நிலை நிலவும்.
விருச்சிகம்- வார ராசிபலன் 3.5.2026 முதல் 9.5.2026 வரை
Published on

விருச்சிகம்

எதிர்மறை சிந்தனைகள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். சம்பள பாக்கி வசூலாகும். சேவை மனப்பான்மை மிகும். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு விலகி எல்லாவற்றிலும் சாதகமான சூழ்நிலை நிலவும்.

தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயர நேரலாம். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும். பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com