கன்னி- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை

திருமணம், குழந்தைப் பேறு என மனம் மகிழும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.
கன்னி- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை
Published on

கன்னி

வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும். தொழிலில் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது. எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மன நிறைவான வாழ்க்கை, ஆரோக்கியமான உடல் நிலை, லாபகரமான வருமானம் ஆகியவற்றை இந்த வாரத்தில் காணப்போகிறீர்கள்.

திருமணம், குழந்தைப் பேறு என மனம் மகிழும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் போன்றவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மாணவர்கள் விரும்பிய கல்வியை விரும்பிய கல்லூரியில் இந்த ஆண்டு தொடர முடியும். பங்குனி உத்திரம் அன்று சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com