மிதுனம்- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை

பண நெருக்கடிகள் அகலும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கும் வாய்ப்புகள் உள்ளது.
மிதுனம்- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை
Published on

மிதுனம்

அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரம். ராசியில் 7, 10-ம் அதிபதி குரு சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளிடம் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். கணவன்- மனைவி இடையே நெருக்கம் கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும்.

பண நெருக்கடிகள் அகலும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கும் வாய்ப்புகள் உள்ளது. கோட்சார செவ்வாயால் தடைபட்ட திருமணம் கைகூடி வரும். சிலர் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம். சுபவிருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பங்குனி உத்திரம் அன்று சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com