ரிஷபம்- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை

உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைபடும்.
ரிஷபம்- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை
Published on

ரிஷபம்

சுப விரயங்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயின் நான்காம் பார்வை குருவின் மேல் பதிவது குருமங்கள யோகமாகும்.சில எதிர்பாராத விரயங்கள் ஏற்பட்டாலும் புதிய சொத்துக்கள் சேரும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களால் சிலருக்கு வம்பு, வழக்கு உருவாகலாம். திருமண முயற்சியில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைபடும். சற்றேறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு குரு தன ஸ்தானத்தை விட்டு நகர்வதால் முக்கிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். பாகப் பிரிவினை தொடர்பாக தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சிறுமன பிணக்கு ஏற்படலாம். பங்குனி உத்திரம் அன்று மகாலஷ்மி அஷ்டோத்திரம் படித்து வர அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com