

விருச்சிகம்
கடந்த கால இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. உங்கள் தனி தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். தடைபட்ட பணிகள் துரிதமாகும்.பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும்.
பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
நாள்பட்ட வியாதிகள் மறையும். 21.4.2026 நள்ளிரவு 1.01 மணி முதல் 23.4.2026 பகல் 3.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தினமும் கந்த குரு கவசம் கேட்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406