

ரிஷபம்
மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். தன ஸ்தானத்தில் 8,11-ம் அதிபதி குரு என கிரக நிலவரம் மிகச் சாதகமாக உள்ளது. பணபர ஸ்தானம் வலிமையாக இயங்குவதால் அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சாமர்த்திய பேச்சுக்களால் காரிய சித்தி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் கூடும். வியாபாரத்தில் நிலவிய போட்டிகள், பொறாமைகள் குறையும்.தொழில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பர விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைத்தாலும் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றும்.
அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். பணி புரியும் இடத்தில் நல்ல மாற்றமான சூழல் உண்டாகும்.ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உற்றார் உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தினமும் லலிதா சகஸ்ரநாமம் கேட்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406