மீனம்- வார ராசிபலன் 19.4.2026 முதல் 25.4.2026 வரை

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்- வார ராசிபலன் 19.4.2026 முதல் 25.4.2026 வரை
Published on

மீனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் சனி செவ்வாய் புதன் சேர்க்கை உள்ளது. வாரத்தின் முற்பகுதியில் பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள்.

வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகுவீர்கள். ஒரு சிலர் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும்.சிலர் மதம் மாறுவார்கள். அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். திருமண முயற்சியில் சில தடை, தாமதங்கள் நிலவ வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சிறு நோய் தாக்கம் உண்டாகலாம்.

ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோயிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடு ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் நிலவும். தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com